2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

110 வைத்தியர்களுக்கும் 90 தாதியர்களுக்கும் பற்றாக்குறை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 27 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்தில் 110 வைத்தியர்களுக்கும் 90 தாதியர்களுக்கும் பற்றாக்குறை நிலவுகின்றன. இந்நிலையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை இல்லாமல் செய்தல் மற்றும்  எதிர்கால அபிவிருத்திகள் தொடர்பான மீளாய்வுக் குழுக் கூட்டம், திருகோணமலையிலுள்ள மாகாண சுகாதாரப் பணிப்பாளர் பணிமனை காரியாலயத்தில்  செவ்வாய்க்கிழமை (26) மாலை நடைபெற்றது.

மேலும், இம்மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் காணப்படும்; முக்கிய குறைபாடுகளையும்; இவ்வருட இறுதிக்குள் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற வைத்தியசாலைகளின் குறைபாடுகளை முதலில் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .