2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

12 மில்லியன் ரூபா செலவில் மைதானங்கள் புனரமைப்பு

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

தம்பலகாமம் பிரதேசத்திலுள்ள ஹமீதியா மற்றும்  கல்மெட்டியாவ தெற்கு ஆகிய இரு முக்கிய பொது விளையாட்டு மைதானங்களும் 12 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக தம்பலகமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் தெரிவித்தார்.

தம்பலகாமம் பிரதேச சபையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"தம்பலகாமம் பிரதேசத்தில் விளையாட்டுத் துறையில் மாகாண ரீதியாகவும் அகில இலங்கை ரீதியாகவும் சாதனையீட்டிய பல வீரர்கள் உள்ளனர்.

எனினும் பிரதேச சபையினுடைய மைதானங்கள் விளையாடுவதற்கு ஏற்ற நிலையில் இல்லாமையினாலும் பாடசாலை மைதானங்களைப் பயன்படுத்துவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றமையினாலும் இப்பிரதேச விளையாட்டு வீரர்கள் தமது விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதனால் மக்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட நான்காண்டு கால அபிவிருத்தி வேலைத்திட்ட முன்மொழிவுகளுக்கிணங்க 2013ஆம்  ஆண்டு புறநெகும வேலைத்திட்டத்தின் கீழ் இந்த விளையாட்டு மைதானங்கள் புனரமைக்கப்படவுள்ளன.

இதனால் முள்ளிப்பொத்தானை, முள்ளிப்பொத்தானை வடக்கு, முள்ளிப்பொத்தானை கிழக்கு மற்றும் கல்மெட்யாவ தெற்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சார்ந்த வீரர்களின் சிறந்த மைதானமின்மை எனும் பிரச்சினைக்கான தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X