2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மூதூர் கிராம சேவையாளர்களுக்கு ஒரு நாள் செயலமர்வு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை எகெட் கரித்தாஸ் மனித உரிமைகள் நிகழ்ச்சிப்பிரிவு திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் சகல கிராம சேவையாளர்களுக்குமான மனித உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு நாள் செயலமர்வொன்று நேற்று  செவ்வாய்க்கிழமை மூதூர் பிரதேச செயலக மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சுமார் 38 கிராம சேவையாளர்கள் பங்குபற்றினர். கிராம சேவையாளர்களை வலுப்படுத்துவதன் மூலம் அவர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவை அவர்கள் சேவையாற்றும் பகுதிகளில் உள்ள மக்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

மூதூர் பிரதேச செயலாளர் என்.செல்வநாயகம் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் பொன்னுத்துரை ஆகியோருடன் இணைந்து எகெட் கரித்தாஸ் திட்ட அதிகாரி மரியநாயகம் மற்றும் மனித உரிமைகள் நிகழ்ச்சிப்பிரிவு இணைப்பாளர் அ.ஜோ.மில்ரோய் ஆகியோர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கு வளவாளர்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு திருகோணமலை அலுவலகத்தில் இருந்து பிராந்திய நிகழ்ச்சித்திட்ட அதிகாரி ஆர்.அமலன் மற்றும் சட்ட ஆலோசகர் எஸ்.அருள்வாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வில் மூதூர் உதவி பிரதேச செயலாளர் எம்.எச்.முகமட் கனீர் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், "எகெட் கரித்தாஸ் பல வருடகாலமாக மூதூர் பிரதேசத்தில் மக்களுக்கு சேவையாற்றி வரும் ஒரு நிறுவனம் என்ற வகையில் அவர்கள் எமக்கு வழங்கிவரும் அனைத்து உதவிகளுக்காகவும் எமது நன்றிகளை தெரிவிப்பதோடு அவர்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் எமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவோம் என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .