2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பு முதல் முல்லைத்தீவு வரை மீன்பிடியை அபிவிருத்தி செய்ய முயற்சி

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                        (எஸ்.எஸ்.குமார்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு வரையான மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்யப்படுவது சம்பந்தமான திட்டத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு கிண்ணியா, பைசல் நகரில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் மீன்பிடி  நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இதில் கலந்து கொண்டு திட்டத்தினை தொடக்கி வைத்தார்.

யு.எஸ்.எயிட்யின் நிதி உதவியில்  இது செயறாபடுத்தப்படவுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, அடுத்த மூன்று ஆண்டு காலத்தில் மட்டக்களப்பு முதல் முல்லைத்தீவு வரையான கடல் வளங்கள் புரணமாக அபிவிருத்தி செய்து மீனவர்கள் தமது தொழிலினை சிறப்பாக மேற்கொள்வதற்கு வழி ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

 

 

alt

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .