2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் பெண்கள் பாடசாலை குறித்து கலந்துரையாடல்

Super User   / 2010 செப்டெம்பர் 22 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                        (எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை நகரத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கான பெண்கள் பாடசாலையின் அவசியம் என்ற தலைப்பிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை ஜமாலியா முஹைதீன் பள்ளிவாசல் பரிபாலன சபை செயலாளர் கமர்தீன் தலைமையில் முற்றவெளி அப்பா சியாரத் மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை ஜம்இயத்துல் உலமா சபைத் தலைவர் எச்.எம்.ஹதியத்துள்ளா இங்கு உரையாற்றும் போது, "இன்று தூர இடங்களில் இருந்து நகர் புறத்திற்கு கல்விக்காக வருகை தரும் வயது வந்த பெண் மாணவிகளுக்கான கல்வித் தேவை உரிய முறையில் நிறைவு செய்யப்படுவதில்லை. கலாசார ரீதியாக பழக்கப்பட்ட மாணவிகள், ஏனைய சமூக பாடசாலைகளில் கல்வி கற்பதில் பல இடையூறுகளை எதிர்நோக்குகின்றனர்.

ஏனைய சமூகத்தினருக்கு அந்தந்த இனத்திற்கு ஏற்ப பெண்கள் பாடசாலைகள் அமைந்துள்ளது. ஆனால்,  திருகோணமலையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு இது ஒரு நீண்ட நாள் குறைபாடாகவே இருந்து வருகின்றது. எனவே இக்குறைபாடுகள் நிவர்த்தி செய்வதன் பொருட்டு, முஸ்லிம்களுக்கான பெண்கள் பாடசாலை அமைவது காலத்திற்கு தேவையான ஒரு விடயமாகும். இதில் முஸ்லிம் சமூகம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்" என கூறினார்.

இந்ந நிகழ்வில் பள்ளிவாசல் சம்மேளன தலைவர் வலீத், அல் ஹிக்மா நிறுவன செயலாளர் வை.எம்.பௌமி, ஜனாஸா நலன்புரிச் சங்க தலைவர் ஜவாஹிர், திருமண பதிவாளர், பள்ளிவாசல் தலைவர், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .