2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவில் மீளக்குடியேறிய முஸ்லிம் மக்களின் குடிசைகள் தீ வைத்து அழிப்பு

Super User   / 2010 நவம்பர் 01 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்டல் காடு பகுதியில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்த குடிசைகள் இன்று அதிகாலை தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.

கடந்த 30 வருடங்காளாக இப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இப்பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்தனர்.

இடம்பெயர்ந்த இவர்கள் திருகோணமலை மாவட்ட அரச அதிபரின் அனுமதியோடு கடந்த வாரம் மீளக்குடியேறியிருந்த நிலையில் இவர்களின் 35 இற்கும் மேற்பட்ட குடிசைகள் இன்று காலை எரிக்கப்பட்டுள்ளன.

மேற்படி மக்கள் தற்போது கிண்ணியா அல் அதான் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • nnassm Tuesday, 02 November 2010 06:45 PM

    இனக்கலவரத்தை தூண்டும் செயல்கள் தற்போது நமது நாட்டில் அதிகரித்து வருகின்றன.இது அரசியல் லாபம் கருதி சில அறிவில்லாத அரசியல்வாதிகளின் வேலை.எல்லா மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்கள் ஒன்றுபட்டால் இவை போன்ற செயல்களை முறியடிக்க முடியும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

    Reply : 0       0

    Fahim Tuesday, 02 November 2010 06:53 PM

    இப்படி மனிதாபிமானமற்ற விதமாக நடந்துகொண்ட கேவலமானவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X