2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

றிசானா நபீக்கின் வீட்டிற்கு ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விஜயம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 14 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

சவூதி அரசாங்கத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வீட்டுப் பணிப்பெண் றிசானா நபீக்கின் வீட்டிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்தார்.


றிசானா நபீக்கின் விடுதலைக்கு வேண்டிய நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதாகவும் அவருக்கு சவூதி அரசாங்கத்தினால் மன்னிப்பு வழங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அவரது பெற்றோர்களுக்கு ரஞ்சன ராமநாயக்கா தெரிவித்தார்.


முகவர் ஒருவரது தவறான செயல் காரணமாக, வயது குறைவான றிசானா நபீக்கை கூடிய வயதுடையவரென்று அவரது கடவூச்சீட்டில் காட்டப்பட்டு வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.  இந்நிலையில், தவறு செய்த முகவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் றிசானா நபீக்கிற்கு மன்னிப்பு வழங்கப்படுமெனவும்  அவர் கூறினார்.


எதிர்வரும்  ஹஜ் பெருநாளுக்கு பின்பு இவருக்கு மன்னிப்பு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


றிசானா நபீக்கின் குடும்பத்திற்கு வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தபோது, எமக்கு வீடு முக்கியம் அல்லவெனவும்  எங்களது மகளின் விடுதலையே முக்கியமெனவும் தெரிவித்து அவர் வழங்கிய சிறு அன்பளிப்பையும் அவரது பெற்றோர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .