2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காசநோய் விழிப்புணர்வு நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 28 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பொதுவைத்தியசாலை காசநோய் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை திருமலை நகராட்சிமன்ற கேட்போர் கூடத்தில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட காசநோய் தடுப்பு வைத்திய அதிகாரி சுரேஷ்குமார் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் டாக்டர் கே.தேவறாஐன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

திருகோணமலை பொதுவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஈ.ஜி.ஞானகுணாளன், 'காசநோயை இலங்கையிலிருந்து இல்லாது ஒழிப்போம் மற்றும் நாங்கள் எவ்வாறு பங்களிப்பு செய்ய வேண்டும்' என்பது விளக்கவுரையாற்றினார். 

வைத்திய நிபுணர் டாக்டர் கனகபாகு, சிறுபிள்ளை வைத்திய நிபுணர் சந்தன ரத்ன, அருள்குமரன், அஐப்த் மற்றும் 300 மேற்பட்ட வைத்தியசாலைகளின் அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .