2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திண்மக் கழிவுகளை அகற்றுவதில் சிக்கல்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திண்மக் கழிவுகளை அகற்றுவதில் கிண்ணியா நகர சபை பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன. இப்பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முகமாக நகரசபைத் தலைவர் டாக்டர் ஹில்மி மஹ்ரூப் மேற்கொண்ட முயற்சியின் பயனாக உள்ளூராட்சி அமைச்சு திண்மக் கழிவுகளை கூட்டுப்பசளையாக தயாரிக்கும் வேலைத்திட்டத்திற்கு 11 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளது.

இதற்கான வேலைத்திட்டங்கள் கிண்ணியா பைசல் நகரில் உள்ள சின்னத்தோட்டம் பகுதியில் ஆரம்பிப்பதற்கான ஒழுங்குகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் திண்மக் கழிவுகளை அகற்றுவதில் சிறந்த முகாமைத்துவம் ஏற்படுவதோடு நகரசபைக்கு மேலதிக வருமானம் கிடைக்கவும் வழி பிறந்துள்ளது.

மேலும் பக்கத்திலுள்ள பிரதேச சபையிடம் இருந்தும் திண்மக் கழிவுகளை விலைக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும் ஹில்மி மஹ்ரூப் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X