2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நடுஊற்று, ஆயிலயடி ஆகிய கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான கலந்துறையாடல்

Kogilavani   / 2011 நவம்பர் 29 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)
சமூக அபிவிருத்தி தொடர்பான புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நடுஊற்று, ஆயிலயடி ஆகிய கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான கலந்துறையாடல் இன்று செவ்வாய்கிழமை கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைவாக, குடிநீர் கிணறுகள், விவசாய கிணறுகள், பொதுச்சந்தை, சிறுகைத்தொழில் நிலையம் மற்றும் நூலகம் ஆகியன இத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்காக நடுஊற்று பிரதேசத்தில் 4 கிராமங்களும் ஆயிலயடி பிரதேசத்தில் 8 கிராமங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன
உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 16.8 மில்லியன் ரூபாவும் வாழ்வாதார திட்டத்துக்காக 3.4 மில்லியன் ரூபாவும் ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டுள்ளது

சேவா லங்கா, வலது குறைந்தோர்களுக்கான அமைப்பு எக்டெக் ஆகிய நிறுவனங்கள் இத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .