2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் விபரங்கள்

Kogilavani   / 2012 நவம்பர் 11 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)

தேசிய வாசிப்பு மாதம் அக்டோபர் 2012 ஐ முன்னிட்டு, கிண்ணியா நகரசபை பொது நூலகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களின்; விபரத்தினை கிண்ணியா பொது நூலகம் வெளியிட்டுள்ளது.

கவிதைப் போட்டியில்,  திஃகிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் என்.எம்.இஜாஸ் முதலாமிடத்தையும் திஃ அல்-அக்ஷா கல்லூரி மாணவன் என்.எம்.ஹஸ்ஸான் இணை;டாமிடத்தினையும் தி-அல்-மினா மகா வித்தியால மாணவி எஸ்.றுமைஸா பானு மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

கட்டுரைப் போட்டியில் தி-குறி-கேணி மகளிர் மகா வித்தியாலய மாணவி எம்.எம்.பத்திரா முதலாமிடத்தினையும் திஃகிண்ணியா மகளிர் மகா வித்தியாலய மாணவி எம்.ஐ. நுஹா பாத்திமா இரண்டாமிடத்தினையும் தி- ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலய மாணவி ஏ.கயாணி மற்றும்  தி- அல்-ஹிறா மகளிர் மகா வித்தியாலய மாணவி ஏ.எஸ்.பர்ஸினா ஆகியோர் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

கிராமிய நடனம் போட்டியில் இஹ்ஸானிய்யா மகளிர் வித்தியாலய மாணவன் தி-குட்டிக்கராஜ் முதலாமிடத்தினையும் திஃகுறி-கேணி மகளிர் மகா வித்தியாலயம் இரண்டாமிடத்தினையும்; திஃஅல்-ஹிறா மகளிர் மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

அறிவுக் களஞ்சியப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு கிண்ணியா மத்திய கல்லூரியும், திஃகுறி-கேணி அறபா மகா வித்தியாலயமும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இப்போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் விரைவில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .