2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குளங்கள் பெருக்கெடுப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி, பரீத்) 

  கந்தளாய் குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டதால் ஈச்சங்குளம், குடாக்கல்பிட்டியா, பரவிபாஞ்சான் ஆகிய சிறு குளங்கள் இன்று அதிகாலை பெருக்கெடுத்துள்ளன.

இதன்காரணமாக தம்பலாகமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்குரபஞ்சியாய், முள்ளிப்பொத்தானை, கமீதியா புரம், ஈச்சநகர், புஹாரிநகர் போன்ற பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இப்பிரதேச மக்களை தம்பலாகமம் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி திருப்பதி இன்று காலை சென்று பார்வையிட்டார்.

இதேவேளை கந்தளாய் வான் கதவு திறந்துவிடப்பட்டதனால் கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மேலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு கிண்ணியா கந்தளாவுக்கான தரைவழிப்பாதை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  ஜான் ஒயா பெருக்கெடுத்துள்ளதால் திருகோணமலை மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

கிண்ணியா கச்சக் கொட்டித்தீவு, சூரங்கல், காளி பாஞ்சான், தம்பலகாமம் வீதிகளும் வெள்ள நீரில் முழ்கியுள்ளன.

இவ்வீதிகளைப் பயன்படுத்துவோர் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .