2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொதுபல சேனாவுக்கு எதிராக கிழக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 19 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கியாஸ் ஷாபி

பொது பல சேனா அமைப்பினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போராட்டங்களைக் கண்டித்து அவ்வமைப்புக்கு எதிராக கிழக்கு மாகாணசபையில் கண்டனத் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை சபையின் தவிசாளர் ஆரியபதி கலபதி தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வில் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குழு நிலைத் தலைவருமான ஏ.எஸ்.ஜெமீலினால் இந்த கண்டனப் பிரேரணை, சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
 
இதன்போது ஹலால் விவகாரம் தொடர்பில் ஆளுந்;தரப்பு சிங்கள மற்றும் முஸ்லிம் உறுப்பினர்களிடையே பலத்த வாக்குவாதம் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய சபை உறுப்பினர் எம்.எஸ்.அமீர்அலி கூறுகையில், 'ஜமியத்துல் உலமா என்பது எங்களுடைய மார்க்க அறிஞர்கள் ஒன்றுகூடி இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முஸ்லிம் மக்களை நெறிப்படுத்துவதாகும்.

சுப்ங்களவர்களுக்கு அஷ்கிரிய மல்வத்துசங்காய போன்று தான் முஸ்லிம் மக்களுக்கு ஜம்மியத்துல் உலமாவாகும். முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் விட்டுக்கொடுப்புடன் வாழ்கின்ற சமூகம் மேலும் பொது பலசேனா என்ற அமைப்பு முஸ்லிம்கள் மீது பல குற்றச்சாட்டுக்களை வைக்கின்றது.

பாகிஸ்தானில் இருந்து 12ஆயிரம் போதகரை இறக்கி சிங்கள மதத்தை அழியப்போவதாக என்று இழந்த குற்றச்சாட்டை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்' என்று கூறினார்.

இறுதியாக கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கா முன் வைத்த சில திருத்தங்களுடன் மேற்படி கண்டனத் தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .