2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிழக்கில் எந்தப் பாடசாலையும் மூடப்படாது: மாகாண கல்வி அமைச்சர்

Super User   / 2013 பெப்ரவரி 20 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-முறாசில்


கிழக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு பாடசாலையையும் மூடும் நோக்கம் கிழக்கு மாகாண சபைக்கு இல்லை என மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

திருகோணமலை கிறீன் பார்க் ஹோட்டலில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"கிழக்கு மாகாண சபையிலுள்ள பாடசாலைகள் தொடர்பாக தவறான கருத்தொன்றை ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. இது பிழையான செயலாகும். கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக நான் ஒருபோதும் கூறவில்லை.

ஆறு மாணவர்கள் உள்ள பாடசாலை கூட பல ஆசிரியர்களோடு  எந்தவொரு தடையுமில்லாது இயங்கி வருகின்றது.
இயங்குகின்ற பாடசாலையை மூடும் நோக்கம் மாகாண சபைக்கு கிடையாது" என்றார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமான்லெப்பை, மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் மாகாண சபை தவிசாளர் ஆரியவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X