2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் விஜயம்

Kogilavani   / 2013 ஜூலை 23 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா பைசல் நகரில் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரணவக்க இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ளார்.

கிண்ணியாவில் சேகரிக்கப்படும் கழிவுகளை பயனுள்ளதாக மாற்றும் நடவடிக்கை கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்,  காணியில் சேகரிக்கப்படும் கழிவுகள் பிரிக்கப்பட்டு மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் கட்டிடத்திற்கான அடிக்கல் ஜெய்கா திட்டத்தினூடாக அண்மையில் நாட்டப்பட்டது.

அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அவற்றினை நகரபிதா தலைமையில் பார்வையிடுவதற்காக இன்று செவ்வாயக்கிழமை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரணவக்க, உள்ளுராட்சி ஆணையாளர் உதயகுமார், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் குணநாதன், உள்ளுராட்சி அபிவிருத்தி பொறியியலாளர் கௌரிபாலன், சீ.சீ.டி உத்தியோகத்தர், நகரசபை செயலாளர் யாழினி நரேந்திநாத், தொழில்நுட்ப உத்தியோகத்தர் சசிதரன் மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பைசல் நகர் திண்மக்கழிவு முகாமைத்துவத்திற்கான நிலைய கட்டுமான வேலைகளை பார்வையிட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .