2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திருமலையில் 40 மில்லியன் ரூபா செலவில் ஆயுர்வேத மருந்து உற்பத்தித் தொழிற்சாலை

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)
திருகோணமலை மாவட்டத்தின் கப்பல் துறையில் 40 மில்லியன் ரூபா செலவில் ஆயுர்வேத மருந்து உற்பத்தித் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் இந்திராணி தர்மராஜா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை அமைச்சின் நிதியில் அமைச்சின் செயலாளரின் உத்தரவுக்கு அமைவாக இது அமையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழிற்சாலைக் கட்டடங்களும் இயந்திரங்களுமாக பெரியளவான இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்ட பின்னர் சுமார் 32 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கமுடியும். இங்கிருந்து மருந்துகள் வெளிவரத் தொடங்கியதும் மிகக் குறைந்த விலைகளில் மருந்துகளைப் பெறக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருமலை வனபரிபாலன திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட 10 ஏக்கர் நிலத்தில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் அண்மையில் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .