2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கந்தளாய் பொலிஸில் ஒருவருக்கு கொரோனா; மாஞ்சோலையில் எவருக்குமில்லை

Princiya Dixci   / 2021 ஜனவரி 13 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து, அவருடன் தொடர்புகளைக் பேணிய 35 பேரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை தனிமைபடுத்தியுள்ளதோடு, பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர்,  திருகோணமலையில் உள்ள கொரொனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய நிலையிலே தொற்றுக்குள்ளாகியுள்ளார் எனவும், அவர், ஈச்சிலம்பற்று தனிமைபடுத்தல் முகாமுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளார் எனவும் கந்தளாய் பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

கந்தளாய் சுகாதார வைத்திய அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இதுவரை மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, 211 பேரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திங்கட்கிழமை  (11) தனிமைப்படுத்தப்பட்ட மாஞ்சோலை கிராமத்தில் 187 அன்டிஜன் பரிசோதனைகளும், 133 பிசிஆர் பரிசோதனைகளும் நேற்று (12) மாலை மேற்கொள்ளப்பட்டன. 

இந்தப் பரிசோதனைகளின்போது தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம் றிஸ்வி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .