2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘கிழக்கிலேயே ஆகக் கூடுதலான வேலையில்லாப் பட்டதாரிகள் உள்ளனர்’

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

ஆகக் கூடுதலான வேலையில்லா பட்டதாரிகள், கிழக்கு மாகாணத்திலேயே உள்ளார்கள் எனவும் இவர்களில் அதிகமானவர்கள், வெளிவாரிப் பட்டதாரிகளாக உள்ளார்கள் எனவும் தெரிவித்த துறைமுகங்கள், கப்பற்றுறைப் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப், இவர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு, அரசாங்கம் முன்வர வேண்டுமென்றார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற வணிகக் கப்பற்றொழில் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டில் வேலையில்லாப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகளை பல வழிகள் மூலமாக ஏற்படுத்திக் கொடுக்க முடியுமெனத் தெரிவித்தார்.

திருகோணமலையிலுள்ள 101 எண்ணெய் தாங்கிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் அவற்றைப் பெற்றோலிய அமைப்பான ஐ.ஓ.சியுடன் இணைந்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றுவதால் அதிகமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்.

மேலும், ஒலுவில் துறைமுகமும் மீனவத் துறைமுகமாக மாற்றப்படுமானால் அங்குள்ள 21 ஆயிரம் மீனவக் குடும்பங்களும் நன்மையடைவார்கள்  எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .