2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘பெண்களை வலுவூட்டும் பாதைகளைக் கண்டறிவோம்’

எப். முபாரக்   / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பெண்களை வலுவூட்டும் பாதைகளைக் கண்டறிவோம்” எனும் தொனிப் பொருளில் வடக்கு மாகாணத்தில்  ஐந்து  மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, கிழக்கு மாகாணப் பெண்களின் கருத்துக்கள்  எவ்வாறு  ஒத்துச் செல்கிறது  என்பதைக்  கண்டறியும் முதல்கட்ட கலந்துரையாடல் அண்மையில் திருகோணமலை ஜெய்காப் பார்க் ஹோட்டலில்  இடம் பெற்றது .

இக்கலந்துரையாடலினை இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச  நிலையமும்,கிராமிய பொருளாதார மற்றும்  சமூக அபிவிருத்தி  அமைப்பும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது.

இதற்கான  வளவாளர்களாக பேராதெனிய,கொழும்பு .யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த  பேராசிரியர்களும் கலாநிதிகளும் கலந்துகொண்டதோடு இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச  நிலையத்தினதும்,கிராமிய பொருளாதார  மற்றும் சமூக அபிவிருத்தி  அமைப்பினதும் முக்கியஸ்த்தர்களும் தங்களுடைய  அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

இதற்கு மாவட்ட மட்டத்திலான அரச மற்றும் அரசசார்பற்ற உத்தியோகத்தர்களும் , ஊடகவியலாளர்களும் கலந்துக் கொண்டனர் .

வடக்கில் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வைப் போன்று கிழக்கிளும் ஆய்வினை மேற்கொண்டு  கிழக்குமாகாணப் பெண்களின் தனிப்பட்ட  சாவால்களைக் கண்டறிந்து நடவடிக்கைகள்  மேற்கொள்ளுமாறு பங்குபற்றுனர்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X