2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மாஞ்சோலை கிராமம் காலவரையின்றி முடக்கம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 12 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், எ.ஆர்.எம்.றிபாஸ், ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக் 

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்துள்ளமையால், கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை கிராம  சேவை உத்தியோகத்தர் பிரிவு காலவாரையின்றி நேற்று (11) மாலை தொடக்கம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக, 
கிண்ணியா பிரதேச கொரோனா தடுப்புச் செயலணித் தலைவரும் பிரதேச செயலாளருமான எம் எச்.எம். கனி தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேசத்தில் மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில்  அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, கிண்ணியா பிரதேச கொரோனா தடுப்பு குழுச் செயலணி, நேற்று மாலை அவசரமாக கூடி இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. 

இதனையடுத்து, மாஞ்சோலை கிராமத்துக்குள் நுழையும் வாயில்களில் பாதுகாப்பு அரண்கள் போடப்பட்டு, இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

05 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளைக் கொண்ட கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் 02 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 38 பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாஞ்சோலைப் பகுதியில் மாத்திரம் 24 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .