2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘யுத்தப் பகுதி புறக்கணிப்பு’

வடமலை ராஜ்குமார்   / 2018 ஜூலை 12 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேர்முகப் பரீட்சையின் போது, அநீதி இழைக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் விடயத்தில் கவனம் எடுக்குமாறு, கிழக்கு மாகாணத் தமிழர் தொண்டராசிரியர் சங்கத்தின் தலைவர் நா. அன்பழகன், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர், சேனையூர், கட்டைபறிச்சான், பள்ளிக்குடியிருப்பு, வெருகல் ஆகிய பிரதேசங்களில் மிகவும் மோசமான நிலையில் யுத்தம் நடைபெற்ற போது, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும், 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள், 2007ஆம் ஆண்டு மீளக்குடியேறினர்.

“இந்தக் காலப்பகுதியில், இங்கு பாடசாலைகள் இயங்கவில்லை. எனவேதான் இப்பகுதி தொண்டர் ஆசிரியர்கள் 2006, 2007 ஆண்டுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் போயுள்ளது.

“இவர்கள் 2005க்கு முன்னர் தொடர்ச்சியாக 04, 05, 06 வருடங்கள் தொடர் சேவையை ஆற்றியுள்ளனர்.  எனினும், தற்போது நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் இவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

“பல தடவை நாடாளுமன்றம் சென்று கல்வியமைச்சர், எதிர்கட்சித்தலைவர் ஆகியோரைச் சந்தித்து, 445 பேருக்கான அமைச்சரவை அங்கிகாரத்தை கொண்டுவந்தவர்களே, இந்த நேர்முகப் பரீட்சையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

“இதனைக் கருத்தில்கொண்டு, யுத்தப் பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தற்போது வெளியாகியுள்ள பெயர்ப் பட்டியலில் உள்வாங்கி, நிரந்தர நியமனம் கிடைப்பதற்கு ஆவண செய்து தருமாறு, கேட்டுக்கொள்கின்றோம்” என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். வியாழேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீநேசன், சித்தாத்தன் ஆகியோருக்கும்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .