2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'கிண்ணியா பின்னோக்கி காணப்படுகின்றது'

Niroshini   / 2016 மே 24 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

“1948ஆம் ஆண்டுக்கு பிறகு திருமலை மாவட்டத்தில் அதிக சனத்தொகையைக் கொண்ட கிண்ணியா பிரதேசத்திலிருந்தே மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது வரலாறு. ஆனால், துர்ப்பாக்கிய நிலை கிண்ணியாவின் அபிவிருத்தி ஒப்பிட்டு ரீதியாக பார்க்கும் போது ஏனைய பிரதேசங்களை விட 15 வருடங்கள் பின்னோக்கியே காணப்படுகின்றது” என  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை(22) தோப்பூரில் 12.5 மில்லியன் செலவில் உருவாக்கப்படவுள்ள நவீன தரத்திலான புதிய பொது விளையாட்டு மைதான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ற்து தெரிவிக்கையில்,

“மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட ஊருக்கு மாத்திரம் மக்கள் பணி செய்யவும் முடியாது மாவட்டத்துக்கே பணிசெய்ய வேண்டும். விட்டுச் சென்ற தொட்டுச் சென்ற பணிகள் நிறையவே தொங்கிக் கிடக்கின்றன. அவற்றுக்கெல்லாம் விடைதேடி முன்னோக்கி செல்ல வேண்டிய நீண்ட பாதை எம்முன் இருக்கின்றது.

தற்போது நல்லாட்சி துளிர்விடத்தொடங்கியுள்ளது. தோப்பூர் பிரதேச இளைஞர்களின் கனவு இன்றுடன் நனவாகிறது. அபிவிருத்தியின் மைல்கல்லை இன்றிலிருந்து ஆரம்பிப்போம். உங்களின் ஒத்துழைப்பும் விடாமுயற்சியாலும் உருவாக்கப்படும் இம்மைதானத்தினை பாதுகாப்பதும் அதனை முறையாக பாவிப்பதும் உங்களது கடமையாகும். இம் மைதானத்திக்கு புல் நாட்டுவதற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஊடாக 03 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .