2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்த சட்ட வரைபு அடுத்த வாரம் நாடாளுமன்றில்

Editorial   / 2017 ஜூலை 17 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்காக அந்த சட்ட வரைபு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்புக்கான உள்ளுராட்சி நிறுவன திட்டத்தை தயாரிப்பதற்காக இன்று (17) இலங்கை மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரைநிகழ்த்துகையில்,

அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை என அரசியல் ரீதியிலும், ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், உண்மையில் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இருக்கவில்லை. உள்ளுராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தல் தொடர்பில் முன்னர் தயாரிக்கப்பட்டிருந்த சட்டத்திலுள்ள முறைகேடுகள் மற்றும் ஒழுங்கற்ற தன்மை காரணமாகவே தேர்தலை நடத்த முடியாத நிலை உருவானது.

கழிவு முகாமைத்துவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசாங்கமும் நிரந்தரமான விஞ்ஞானபூர்வமான திட்டத்தை அமுல்படுத்தவில்லை.

அரசியல் ரீதியான குறுகிய மனப்பாங்கின்றி மனச்சாட்சிக்கு அமைய சிந்திக்கும் அனைவரும் அதனை ஏற்றுக் கொள்வதாகவும், இனிவரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசாங்கமும் முகம்கொடுக்க தேவையற்ற விதத்தில் நாட்டின் கழிவு பிரச்சினையை நிறைவு செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

தமது நிறுவன அதிகாரத்துடன் உரியவாறு சேவையாற்றுவதற்கு நகரசபைத் தலைவர்களும் மாகாண செயலாளர்களும் பாடுபட வேண்டும். சில உள்ளுராட்சி நிறுவனங்கள் முன்னாள் தலைவர்களால்  இன்னமும்  இயக்கப்படுகிறது. அந்த நிறுவனங்களுக்குரிய வாகனங்கள் உள்ளிட்ட வளங்கள் அவர்களது தனிப்பட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக எனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அரசியல் தலைமைத்துவத்தின் கருத்துக்களுக்கமைய அரச அலுவலர்கள் செயற்படுவது நாட்டின் கலாச்சாரமாக இருந்த போதிலும், தற்போது அவ்வாறான அழுத்தங்கள் இல்லை என்பதுடன், அனைத்து அரச அலுவலர்களுக்கும்  பொறுப்பையும், கடமையையும் சரியாகவும், முறையாகவும் நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தொவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X