2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாடாளுமன்ற தேர்தல்: த.தே.கூ முழுமையான வெற்றியை பெறாது

Kamal   / 2020 ஜனவரி 18 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்குதான் மாற்று அணிகள் உருவாகுவதற்கான காரணம் எனத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழத் தேசியக் கூட்டமைப்பால் முழுமையான வெற்றியை பெற்றுகொள்ள முடியாதெனவும் தெரிவித்தார். 

அதேபோல், தந்தை செல்வா ஆயுள் காலம் வரையில் கட்சியின் தலைவராக இருக்கவில்லை என்பதை முன்னுதாரணமாக கொண்டு புதிய கூட்ட​ணிக்கு தலைமைத்துவ  சபை ஒன்றை உருவாக்குது தொடர்பாக உத்தேசிக்ப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் .

உள்நாட்டு தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியொன்றில் இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த அவர்,

புதிய நாட்கு கட்சிகள் ஆலோசித்து வருவதாகவும்,   விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கட்சி, அனந்தி தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சி கலகம் என்பனே தற்போது புதிய கூட்டணி பற்றி பேசி வருகின்றன.

எவ்வாறாயினும், மேற்படி  கட்சிகளில் தற்போது ஈழமக்கள் புரட்சிகள விடுதலை முன்னணிக்கு (ஈ.பி.ஆர்.எல்.எப்) மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்த்து உள்ளதாகவும், அந்த கட்சியின் பெயரை மாற்றுவது தொடர்பாக ​அதன் மத்திய குழுவில் ஆராய்ந்து அனுமதிகளை பெற்றுகொண்ட பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழு  அதற்கான அனுமதியை பெற்றுத்துரும் பட்சத்தில் அதன் கிழேயே புதிய கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எனவும்,  அந்த கூட்டணிக்கான ஒப்பந்தம் எதிர்வரும் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்பாகச் செய்யப்படலாம்  எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தன்னிச்சையான போக்கே புதிய கூட்டணி உருவாக காரணம் எனத் தெரிவித்த அவர்,  2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடலாம் என்பதே தமது நோக்கம் எனவும் தெரிவித்தார். 

அதேபோல், தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய கூட்டணியால் வெற்றிபெற முடியாதென தெரிவிக்கப்படுவதாலும், கூட்டமைப்பினால் முழுமையான வெற்றியை அடுத்த தேர்தலில் பதிவு செய்ய முடியாது என்பதே உண்மை நிலைமை எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும்,  நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மூன்று தடவைகள் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுகொள்வதற்கான சந்தர்ப்பம் இருந்த போதிலும் அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நழுவ விட்டதெனவும் தெரிவித்தார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X