2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வாருங்கள் சுத்தம் செய்வோம்...

Kogilavani   / 2017 ஜூன் 06 , மு.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

களுத்துறை மாவட்டத்தில், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட புளத்சிங்கள, யட்டகம்பிற்றிய மற்றும் நாஹகதொல பிரதேசங்களுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (05) முற்பகல் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்தார்.   

அங்கு, அழிவடைந்த வீடுகள் மற்றும் காணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார். இதேவேளை, உலக சுற்றாடல் தினத்தையொட்டி, சுற்றாடல் அமைச்சினால் அப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.   

இராணுவத்தினர் மற்றும் சீன உதவிக் குழுவின் பங்களிப்புடன் இந்தச் சிரமதான நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.   

இதேவேளை, பாஹியங்கல மலை மண்சரிவுக்குட்பட்டு நாஹகதொல கங்கையில் ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் நாஹகதொல பிரதேசவாசிகள் வெள்ள அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளனர். அந்த இடங்களைக் கண்காணித்த ஜனாதிபதி, அது தொடர்பான அறிக்கையை விரைவாக வழங்குமாறு மாவட்ட செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X