2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வீரர்கள் சங்கத்தின் கோரிக்கை நிராகரிப்பு

Gopikrishna Kanagalingam   / 2017 மே 17 , பி.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையிலான ஊதியம் தொடர்பான முரண்பாட்டுக்கு, வெளியாரின் மத்தியஸ்தத்தைக் கொண்டுவர வேண்டுமென, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சங்கம் விடுத்த கோரிக்கையை, கிரிக்கெட் சபையின் தலைவர் டேவிட் பீவர் நிராகரித்துள்ளார்.

கிரிக்கெட் சபையைப் பொறுத்தவரை, தங்களால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வமான ஊதிய ஒப்பந்தமே, எந்தப் பேச்சுவார்த்தையினதும் ஆரம்பமாக இருக்க வேண்டுமென்பதே, அவரின் நிலைப்பாடாக அமைந்துள்ளது.

கிரிக்கெட் சபையின் தற்போதைய முன்மொழிவைப் பற்றிய பேரம்பேசல்களில் ஈடுபடாமல், மத்தியஸ்தத்துக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை, “அசாதாரணமானது” என, அச்சபை வர்ணித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு, வழக்கமாக, கிரிக்கெட் சபையின் ஊதியத்தின் குறிப்பிட்ட ஒரு சதவீதம், ஊதியமாக வழங்கப்படுகிறது. அந்த முறையை மாற்றுவதற்கு, கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது. இதை, வீரர்களோ அல்லது வீரர்களின் சபையோ ஏற்றுக் கொள்ளாத நிலையிலேயே, இழுபறி நிலை தொடர்கிறது.

கிரிக்கெட் வீரர்களின் தற்போதைய ஒப்பந்தம், ஜூன் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், அதற்கு முன்பு, இரு தரப்பும் இணக்கமொன்றைக் காண வேண்டிய தேவை காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X