2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வைகாசிப் பொங்கல்...

Super User   / 2011 ஜூன் 13 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் விழா இன்று திங்கட்கிழமை மிகச் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வன்னிப்பிரதேசத்தில் தொன்மைமிக்கதும் வரலாற்றுச்சிறப்பு மிக்கதுமான அம்மன் கோவிலில் கடந்த மாதம் 30ஆம் திகதி பாற்குடத்; தொண்டல் வைபவத்துடன் ஆரம்பமான பொங்கல் மகா உற்சவத்தின் பிரதான நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்விழாவில் புலம் பெயர் நாடுகளில் இருந்தும் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் தென்னிந்தியாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருப்பதாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் மு. குகதாசன் தெரிவித்துள்ளார்.

உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயம் வாய்ந்த வற்றாப்பள்ளை கண்ணகி அம்மன் வன்னி மக்களின் காவல் தெய்வமாக வணங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின்  பல பாகங்களில் இருந்து இலவச பஸ் போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் முடிந்ததும் நேரடியாக அங்கிருந்து கால் நடையாக கதிர்காமத்திற்கு பக்தர்கள் செல்லவுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். Pix By :- Romesh Madushanka


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .