2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வானத்தில் ஓர் அதிசயம்...

Menaka Mookandi   / 2011 ஜூன் 16 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பத்து ஆண்டுகளுக்குப்பிறகு நிகழ்ந்த நீண்ட நேர முழு சந்திர கிரகணத்தை மக்கள் நேற்று காணக்கூடியதாக இருந்தது. இந்த சந்திர கிரகணம் சுமார் 100 நிமிடங்கள் வரை நீடித்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு முன்பு கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதி நீண்ட நேர முழு சந்திர கிரகணம் நிகழ்ந்துள்ளது.

இது இந்த நூற்றாண்டிலேயே மிகவும் அடர்த்தியான இருளைக் கொண்ட முழு சந்திர கிரகணமாக காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் மத்திய பகுதியின் நிழலில் சந்திரன் பயணித்ததுதான் இந்த சந்திர கிரகணத்தின் சிறப்பு தன்மை என்றும் அதன் காரணமாக மற்ற கிரகணங்களைவிட மிகவும் அடர்த்தியான இருளைக் கொண்டதாக இது இருந்தது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் எல்லா இடங்களிலும் இச்சந்திர கிரகணம் நன்றாக தெரிந்ததாகவும் ஆபிரிக்காவின் கிழக்குப்பகுதியில் பாதியிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும், மத்திய ஆசியாவிலும் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவிலும் இது நன்றாகத் தென்பட்டதாக கூறப்படுகின்றது. Pix By :- Indrarathna Balasuriya, Pradeep Dilrukshana


You May Also Like

  Comments - 0

  • riyas Friday, 17 June 2011 03:02 AM

    நாத்திகர்களுக்கு இறைவன் இருப்பதற்கான அத்தாட்சி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .