2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தந்தையைப் போற்றுவோம்...

Menaka Mookandi   / 2011 ஜூன் 19 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்று உலக தந்தையர் தினமாகும். அன்னையர் தினத்தைப் போலவே தந்தையர்களுக்காவும் ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக சோனாரா டாட் என்ற பெண்மணி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இந்த முயற்சிகளின் பயனாக 1910ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி உலகிலேயே முதன் முறையாக வோஷிங்டனில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.

தந்தையர்களுக்குப் பரிசளிப்பது, சிறப்பு விருந்தளிப்பது, குடும்பத்தினருடன் வெளியில் சென்று கொண்டாடுவது என பல அமசங்களை உள்ளடக்கிய வகையில் இந்த தந்தையர் தினம் கொண்டாட ஏற்பாடாகியது.

1909ஆம் ஆண்டு ஸ்போகேனில் உள்ள தேவாலயமொன்றில் அன்னையர் தினம் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்ட சோனாரா டாட் என்ற பெண், தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என கருதினார். அடுத்த ஆண்டே அதை அவர் நிறைவேற்றினார். அன்று முதல் அது உலகெங்கும் பிரபலமாகி தற்போது உலக அளவில் கொண்டாடப்படும் தினமாகியுள்ளது.

1910ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட தந்தையர் தினத்தின்போது உயிருடன் இருக்கும் தந்தையருக்கு சிவப்பு ரோஜா கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இறந்த தந்தையரின் சமாதிகள், படங்களுக்கு முன்னால் வெள்ளை ரோஜாக்களை வைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் 1966ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி லிங்டன் ஜான்சன், தந்தையர் தினத்தை அங்கீகரித்து உத்தரவிட்டார். அதன்படி ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என அவர் உத்தரவிட்டார். அதன் பின்னர் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1972ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு சட்டத்தின் மூலம் தந்தையர் தினம் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

தந்தையர் தினம் தவிர ஆடவர் தினம் என்ற ஒன்று ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இது, தந்தையர் ஆகாத ஆண்கள், இளைஞர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தங்களது உறவுகளால் கைவிடப்பட்ட தந்தையர்கள் சிலர் கொழும்பு நகரில் ஆதரவின்றி காணப்படுவதை படங்களில் காணலாம். Pix By :- Waruna Wanniarachchi


You May Also Like

  Comments - 0

  • ajan Sunday, 19 June 2011 07:06 PM

    :sad: சொல்லு இருக்கும் முன்னர் செயல் இருக்கட்டும்.
    அப்பாவை எப்படி பார்கிறார்கள் என்று தான் தெரிகிறது
    நாளை அவரும் அப்பாவா இருப்பார். இதே நிலைமை அவருக்கும் வாரலாம்.

    Reply : 0       0

    mafas Sunday, 19 June 2011 08:26 PM

    அனைத்து தந்தையர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    இந்த போட்டோ பார்த்தாவது தந்தை கை விடும் பிள்ளைகள் திருந்தட்டும்.

    Reply : 0       0

    sathik Sunday, 19 June 2011 08:33 PM

    அந்த பல்லுத புல்லை பார்க்கும் அவரும் ஒரு naalaikku palluppar ynepathai maranthu vittal, anaiththu thantheyerukkum waalyhukal.

    Reply : 0       0

    THER Monday, 20 June 2011 01:24 AM

    அவர்களுக்கு வாக்கு ( வோட் ) இருந்தால் அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவர் .

    Reply : 0       0

    malwanai maindan Tuesday, 21 June 2011 03:54 AM

    நாமும் ஒரு நாள் ஒரு தந்தையாக வருவோம் என நினைத்தால்... இவர்களுக்கேன் இந்நிலை?............
    (மல்வானை மைந்தன்)

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .