2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாணவர்களின் எதிர்ப்பு...

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனியார் பல்கலைக் கழகங்களை இலங்கையில் நிறுவுவதற்கு பல்கலைக்கழக ஆணைக்குழு அனுமதி வழங்குவதாகவும் பல்கலைக்கழகத்தில் இதுவரை கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அகற்றிவிட்டு பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பணிக்கு அமர்த்தியிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல்கலை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்புல கலைகள் பீடத்தின் மாணவ அமைப்பினால் அப்பல்கலைக்கழகத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களை படங்களில் காணலாம். Pix: Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0

  • hamaza Wednesday, 05 October 2011 10:06 PM

    கல்வி இலவசமாக கிடைத்ததால்தான் இந்த ஆர்ப்பாட்டம்........ தனியார் பலகலைக்கழகம் இலங்கைக்கு மிக அவசியமான ஒன்று....

    Reply : 0       0

    Mohammed Hiraz Wednesday, 05 October 2011 11:29 PM

    அடிப்படையில் கல்வி வாய்ப்பை தடை செய்வது மனித உரிமை மீறலாகும். சிறுவயதில் கல்வியில் ஆர்வம் காட்டாதவர்கள் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கல்வியில் ஆர்வம் காட்டின் அவர்களுக்கு விருப்பமான துறையில் கல்வி பயில வாய்பளிப்பது கடமையாகும்!!! எல்லா மனிதர்களிடமும் திறமைகள் இருகின்றன. அவை வெளிபடும் கால நேரங்கள் முன் பின் ஆக முடியும். அதற்காக அவர்களின் முன்னேற்றத்திற்கு தடைபோடுவது நியாயமா??? எமது நாட்டின் சீரழிவுக்கு காரணமும் எமது முன்னேற்றத்திற்கு தடையும் மனித வளத்தை தடைகள் தரப்படுத்தல்கள் போட்டு கட்டுப'படுத்தி வைதிருப்பதே. பொதுவாக தனியார் பல்கலைக்கழகங்களை சர்வதேச சந்தையை கவனத்தில் எடுத்தாவது நிறுவ எல்லோரும் அனுமதிக்க வேண்டும்!!! அரச பல்கலைகழகங்களில் பயில்வோருக்கே அரச தொழிலில் முன் உரிமை என்ற நிபந்தனையுடனாவது எல்லா இலங்கயரும் உயர்பொதுவாக மத்தியகிழக்கில் வேலை செய்வோருக்கு நன்கு தெரியும். எமது நாட்டில் சாதாரண தர சன்றிதழ் உள்ள மாணவனின் திறமை அயல் நாடுகளில் உள்ள பட்டம் பெற்றோரிடத்தில் கூட கிடையாது. எத்தனை இலங்கையர்கள் உயர்தரம் சாதாரண தர பெறுபேறுகளுடன் மத்தியகிழக்கு நாடுகளில் வேலைகளில் அமர்ந்து தம் திறமையால் முன்னேறி அயல் நாட்டு இளமாணி இமுது மாணி பட்டம் பெற்ற நபர்களை மேய்கிறார்கள் பணியகங்களில்!!! எனவே தங்கள் கல்வி நிலையை உயர்த்தவும் அபொருளாதார நிலமையை உயர்த்த சிறந்த வேலைவாய்புகளை உள் நாட்டில் இல்லா விட்டாலும் சர்வதேச சந்தையில் பெற்று கொள்ளவாவது எல்லோருக்கும் உயர்கல்வி கல்வியில் சமத்துவம் என்ற கோட்பாடுகள் அடிப்படையில் தனியார் உயர் கல்வி நிறுவனங்களை அனுமதிப்பது மனித பண்புள்ள மனிதர்களின் உரிமைகளை மதிகின்ற ஒவ்வொருத்தரின் கடமையாகும்.

    Reply : 0       0

    AJ-DJ Thursday, 06 October 2011 12:33 AM

    நகம் கடிக்க நேரம் இல்லாம இங்க வந்து நகம்கடிசிகிட்டு.....

    Reply : 0       0

    vaasahan Thursday, 06 October 2011 01:07 AM

    மாணவர் சக்தி புறக்கணிக்கப்படுவதால் புறக்கணிப்பவர்கள் தாங்கள் ஏமாற்றப்படுவது ஒத்தி வைக்கப்படலாம். ஆனால் இது தலைமுறை தலைமுறையாக தொடரும் என்பதை அரசியல் வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .