2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஐ.அ.இராஜ்ஜியத்தின் முதல் பெண் அமைச்சர்

Super User   / 2011 நவம்பர் 23 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் ஷேக் லுப்னா பின்த் கலீத் பின் சுல்தான் அல் காசிமி உத்தியோகபூர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை கொழும்பை வந்தடைந்தார்.

இவரை கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.

அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் இலங்கை வந்த ஷேக் லுப்னா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பெருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட பல அரச முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் முதல் பெண் அமைச்சர் ஷேக் லுப்னா என்பது குறிப்பிடத்தக்கது. (இர்ஷாத் றஹ்மத்துல்லா)


You May Also Like

  Comments - 0

  • sumi Wednesday, 23 November 2011 10:07 PM

    முஸ்லிமான ஆணும் பெண்ணும் இப்படி கைலாகு கொடுக்க இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதி உண்டா..? நான் அறிந்தவரை இது அவர்களின் சமயத்தில் தடுக்கப்பட்ட ஒன்றாகும். தயவுசெய்து விடயம் தெரிந்தவர்கள் தெளிவு படுத்தவும்

    Reply : 0       0

    Rafi Wednesday, 23 November 2011 11:04 PM

    முஸ்லிமான ஆண் , முஸ்லிமான பெண் என்றில்லை.. எந்தவொரு ஆனும் எந்வொரு பெண்ணுடன் கைலாகு செய்தல் இஸ்லாத்தில் முற்றிலும் தடுக்கப்பட்டது.

    Reply : 0       0

    sumi Thursday, 24 November 2011 01:48 AM

    அப்படியானால் இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அமைச்சருக்கு இது தெரியாதா?

    Reply : 0       0

    Rizvi Mohammed Thursday, 24 November 2011 03:34 AM

    தம்பி sumi இந்த அரசியல்வாதிகளிடம் இஸ்லாம் இருந்தா மார்க்கம் இருந்தால் இந்த நாட்டில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் இவர்களெல்லாம் பெயர்தாங்கி முஸ்லிம்கள்தான்.

    Reply : 0       0

    pasha Thursday, 24 November 2011 06:25 PM

    பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் எவ்வோலோவோ திறம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X