2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தனிச்சிங்களத்தில் 'வாகரை'

Super User   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களில் ஒன்றான வாகரையின் நுழைவாயிலில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர் பலகையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து அப்பிரதேச மக்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சிங்களம், தமிழ், மற்றும் ஆங்கிலம் ஆகிய  மும்மொழிகளிலும் காணப்பட்ட அப்பெயர் பலகை தற்போது சிங்களத்தில் மட்டுமே காணப்படுகிறது.

இது தொடர்பாக ஓகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற்ற வாகரை பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா சுட்டிக்காட்டியிருந்தார்.

அக்கூட்டத்திற்கு சமுகமளித்திருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி மும்மொழிகளிலும் “வாகரை” என பொறிக்கப்படும் என உறுதி மொழியளித்திருந்தார்.

குறித்த அதிகாரி உறுதிமொழி அளித்து இரண்டு மாதம் கடந்து விட்ட போதிலும் சிங்கள மொழியில் மட்டுமே இன்று வரை “வாகரை” என அப்பெயர்பலகை காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .