2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அணித்தலைவராக ஏபி டி வில்லியர்ஸ்

Editorial   / 2017 ஜூன் 14 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரைத் தொடர்ந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில், இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், தென்னாபிரிக்க அணியின் தலைவராக, ஏபி டி வில்லியர்ஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வழக்கமான தலைவரான ஃபப் டு பிளெஸி, இந்தத் தொடரில் பங்குபற்றாத நிலையிலேயே, தலைவராக, ஏபி டி வில்லியர்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், தென்னாபிரிக்க அணியின் மோசமான  பெறுபேறுகளைத் தொடர்ந்து, ஒருநாள் சர்வதேசப் போட்டி அணியின் தலைமைப் பொறுப்பை, வில்லியர்ஸ் இழப்பாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருந்தன. ஆனால், இருபதுக்கு-20 சர்வதேச அணியின் பதில் தலைவர் பொறுப்பு, அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை, அவர் மீதான நம்பிக்கையை, தேர்வாளர்கள் இழக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

இந்தத் தொடரில், ஹஷிம் அம்லா, ஜேபி டுமினி, குயின்டன் டீ கொக் ஆகியோருக்கு, ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

குழாம்: ஏபி டி வில்லியர்ஸ், ஃபர்ஹான் பெஹர்டியன், றீஸா ஹென்ட்ரிக்ஸ், இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், மோர்னி மோர்க்கல், கிறிஸ் மொறிஸ், மங்கலிஸோ மொசெஹ்லி, வெய்ன் பார்னெல், டேன் பற்றெர்ஸன், அன்டிலே ஃபெக்லுவாயோ, டுவைன் பிறீடோரியஸ், தப்ரைஸ் ஷம்சி, ஜொன்-ஜொன் ஸ்மட்ஸ்.

இந்தத் தொடருக்கான இங்கிலாந்துக் குழாம்: ஒய்ன் மோர்கன், ஜொனி பெயர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜொஸ் பட்லர், மேஸன் கிறேன், டொம் குரான், லியம் டவ்ஸன், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டன், லியம் லிவிங்ஸ்டோன், டாவிட் மலன், கிறெய்க் ஒவேர்ட்டன், லியம் பிளங்கட், ஜேஸன் றோய், டேவிட் வில்லி, மார்க் வூட்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X