2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரையிறுதியில் இந்தியா; இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

Editorial   / 2017 ஜூலை 16 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் உலகக் கிண்ணத் தொடரில், நேற்று நடைபெற்ற போட்டிகள், குழுநிலைப் போட்டிகளின் நிறைவுப் போட்டிகளான அமைந்தன.

நடைபெற்ற 4 போட்டிகளில், நியூசிலாந்து அணியைத் தோற்கடித்த இந்திய அணி, அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இதற்கு முன்னர் நடைபெற்ற 6 போட்டிகளில் தோல்வியடைந்திருந்த நிலையில், பாகிஸ்தானை எதிர்கொண்ட இலங்கை அணி, அப்போட்டியில் வெற்றிபெற்று, ஆறுதல் வெற்றியைப் பெற்றுக் கொண்டது. இதன்படி, இந்தத் தொடரில் வெற்றியெதனையும் பதிவுசெய்யாத ஒரே அணியாக, பாகிஸ்தான் அணி விடைபெற்றது.

 

அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா:

அவுஸ்திரேலியா: 269/10 (48.3 ஓவ.) (துடுப்பாட்டம்: நிக்கோல் போல்ட்டன் 79 (87), எலைஸ் பெரி 55 (58), பெத் மூனி 53 (58), அலெக்ஸ் பிளக்வெல் 33 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுயே லூஸ் 5/67, மரிஸான்னே கப் 2/26, டேன் வான் நியகேர்க் 2/41)

தென்னாபிரிக்கா: 210/10 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: லாரா வொல்வார்ட் 71 (94), திரிஷா செட்டி 37 (54) ஓட்டங்கள். பந்துவீச்சு: றாஷெல் ஹைன்ஸ் 2/12, ஜெஸ் ஜொஹன்னஸென் 2/40, எலைஸ் பெரி 2/47)

போட்டியின் நாயகி: எலைஸ் பெரி

 

இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்:

இங்கிலாந்து: 220/7 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: ஹீதர் நைட் 67 (88), தம்மி பியூமொன்ட் 42 (71), லாரா மார்ஷ் 31 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: அ/பி பிளெற்சர் 3/33)

மே.தீவுகள்: 128/9 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: ஹேலி மத்தியூஸ் 29 (64) ஓட்டங்கள். பந்துவீச்சு: நட்டாலி ஷிவர் 3/3)

போட்டியின் நாயகி: ஹீதர் நைட்

இந்தியா எதிர் நியூசிலாந்து:

இந்தியா: 265/7 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: மித்தாலி ராஜ் 109 (123), வேதா கிருஷ்ணமூர்த்தி 70 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: லெய்க் கஸ்பெரெக் 3/45, ஹன்னா றோவ் 2/30)

நியூசிலாந்து: 79/10 (25.3 ஓவ.) (துடுப்பாட்டம்: அமி சட்டர்த்வைட் 26 (47) ஓட்டங்கள். பந்துவீச்சு: ராரேஷ்வரி காயகௌட் 5/15, தீப்தி ஷர்மா 2/26)

போட்டியின் நாயகி: மித்தாலி ராஜ்.

 

இலங்கை எதிர் பாகிஸ்தான்:

இலங்கை: 221/7 (50 ஓவ.) (துடுப்பாட்டம்: டிலானி மனோதரா 84 (111) ஓட்டங்கள். பந்துவீச்சு: டியானா பைய்க் 3/41)

பாகிஸ்தான்: 206/10 (46.4 ஓவ.) (துடுப்பாட்டம்: நைன் அபிடி 57 (71), அஸ்மாவியா இக்பால் ஆ.இ 38 (45) ஓட்டங்கள். பந்துவீச்சு: சந்திமா குணரத்ன 4/41, அமா காஞ்சனா 2/31)

போட்டியின் நாயகி: சந்திமா குணரத்ன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X