2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரிலிருந்து கமரூன் அணி வெளியேற்றம்.

Super User   / 2010 ஜூன் 21 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் டென்மார்க் அணியுடனான போட்டியில் கமரூன் அணி தோல்வியுற்றதால் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

இதேவேளை, உலகக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டிகளிலிருந்து வெளியேறிய முதல் அணி கமரூன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அணிகள் மோதிய போட்டியின் ஆரம்பத்தில் கமரூன் அணி வீரர் சாமுவேல் எட்டோ 10ஆவது நிமிடத்தில் கோல் அடித்து டென்மார்க் வீரர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

பின்னர் போட்டியின் 33ஆவது நிமிடத்தில் டென்மார்க் வீரர் நிக்கோலஸ் பென்ட்னர் கோல் அடித்தார். இரண்டாவது பாதி ஆட்டத்தின் 61ஆவது நிமிடத்தில் டென்மார்க் வீரர் டெனிஸ், கோல் போட்டதால் 2க்கு1 என்ற கணக்கில் டென்மார்க் வெற்றி பெற்றது.

இ பிரிவில் இடம்பெற்றிருந்த கமரூன் அணி, ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியடைந்திருந்த நிலையில் இரண்டாவது போட்டியிலும் தோற்றதால் போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X