2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிரிக்கெட் விதிகளில் மாற்றம்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட்டில் களத்தடுப்புச் சம்பந்தமான விதியொன்றில் மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ள , கிரிக்கெட் விதிகளுக்குப் பொறுப்பான அமைப்பான மெரில்லிபோன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி) அறிவித்துள்ளது.

இதன்படி, துடுப்பாட்ட வீரரொருவர் தான் பந்தை அடிக்கப் போகும் திசை குறித்துத் தெளிவான சமிக்ஞைகளை மேற்கொண்டால், விக்கெட் காப்பாளர் தவிர்ந்த ஏனைய களத்தடுப்பாளர்கள், பந்துசெல்லவுள்ள திசையை நோக்கிக் கணிசமானளவு நகர முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், பாவட் அலாமின் பிடியொன்றைப் பிடித்த போது, இது தொடர்பான விவாதம் ஏற்பட்டு, சர்வதேச கிரிக்கெட் விளையாடும் நடைமுறைகளில் இம்மாற்றம் ஏற்பட்டது. அதுவே, தற்போது விதியாக மாற்றமேற்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .