2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சம்பியனானது இந்தியப் பெண்கள் அணி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்கள் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்த இந்திய அணி சம்பியனாகியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகழையிழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், மிதாலி ராஜ் 73(65) ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், அனாம் அமின் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

122 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகழையிழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 17 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், பிஸ்மா மரூப் 25(26), ஜாவேரியா கான் 22(26) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஏக்தா பிஷ்ட் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகியாகவும், தொடரின் நாயகியாகவும் மிதாலி ராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X