2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஜப்பான் கிரான்ட் பிறிக்ஸில் ஹமில்டன் வெற்றி

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் கிரான்ட் பிறிக்ஸில் மேர்சிடஸ் அணியின் வீரரான இங்கிலாந்தின் லூயிஸ் ஹமில்டன் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 41 போர்மியுலா வன்  வெற்றிகளை பெற்ற அரிட்டோன் சென்னாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

பந்தயத்தின் வரிசையில் முதலாவதாக ஆரம்பித்த சக மேர்சிடஸ் அணி வீரரை ஆரம்பத்திலேயே முந்திய ஹமில்டன், பந்தயத்தில் எந்தவொரு பகுதியிலும் பின்தங்கவில்லை. இதையடுத்து தனக்கும், ரோஸ்பேர்க்குக்கும் இடையிலான புள்ளி வித்தியாசத்தை 48 ஆக ஹமில்டன் அதிகரித்துக் கொண்டுள்ளார்.

கடந்த வாரம் எதிர்பாராவிதமாக சிங்கப்பூரில் பின்னடைவை மேர்சிடஸ் அணி சந்தித்திருந்த நிலையில், இப்பருவகாலத்தில் 8வது வெற்றியை ஹமில்டன் பெற்றுள்ளதோடு, ரோஸ்பேர்க் இரண்டாமிடம் வந்துள்ளதும் எட்டாவது சந்தர்பமாகும்.

இப்பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பெராரி அணியின் செபஸ்ட்டியான் வெட்டல் பெற்றார். இவர் அனைத்துமாக 218 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திலும், ரோஸ்பேர்க் 229 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும். ஹமில்டன் 277 புள்ளிகளுடன் முதலாமிடத்திலும் உள்ளனர்.

இத்துடன் 14 பந்தயங்களில் 11 பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ள மேர்சிடஸ் அணி கார் வடிவமைப்பாளர்களின் தரப்படுத்தலில் 506 புள்ளிகளைப் பெற்றுள்ளதோடு, பெராரி 337 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .