2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

டுவர் டி பிரான்ஸ்: முன்னணியை நீடித்தார் கிறிஸ் ஃப்ரூம்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 21 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மூன்றாவது டுவர் டி பிரான்ஸ் வெற்றியை நோக்கி நகருகின்ற பிரித்தானியாவின் கிறிஸ் ஃப்ரூம், 17ஆவது கட்டத்தின் முடிவில், தனது முன்னிலையை, இரண்டு நிமிடங்கள் மற்றும் 27 செக்கன்களினால் நீடித்துக் கொண்டுள்ளார்.

ஃபினு எமுசொன்னில் இடம்பெற்ற குறித்த 17ஆவது கட்டத்தை ரஷ்யாவின் ரஷ்யாவின் இல்நூர் ஸகரின் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஃப்ரூமின் மஞ்சள் சீருடைக்கான ஒரேயொரு போட்டியாளராக சக பிரித்தானியரான, மொத்தமாக, தற்போது மூன்றாமிடத்திலுள்ள அடம் யேட்ஸ் மாத்திரமே காணப்படுகிறார்.

இதேவேளை இந்தக் கட்டத்தின் முடிவில், போக்கு மொலிமா, நைரோ கின்டானா ஆகியோர், குறிப்பிடத்தக்க நேரங்களை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில், ஏற்கெனவே, பிரித்தானியாவின் கவென்டிஷ், இன்னும் சில வாரங்களில் பிரேஸிலின் றியோ டி ஜெனீரோவில் ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் செலுத்தும் பொருட்டு டுவர் டி பிரான்ஸிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போது சுவிற்ஸர்லாந்தின் ஃபாபியான் கஞ்செலாராவும், ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஓய்வெடுக்கும் முகமாக டுவர் டி பிரான்ஸிலிருந்து வெளியேறியுள்ளார்.

இந்தத் தொடரானது கடுமையானதாக தனக்கு அமைந்ததாகவும், பயங்கரமான அழுத்தத்தை எதிர் நோக்கியதாகவும், தான் களைப்படைந்ததாக உணர்வதாகவும் தெரிவித்த 35 வயதான கஞ்செலாரா, தான் ஒலிம்பிக்கில் சிறப்பாகச் செயற்பட வேண்டுமென்றால் தனக்கு ஓய்வு தேவை என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .