2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தஸ்கினின் இடைக்காலத் தடை உறுதிப்படுத்தப்பட்டது

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 23 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீள் விசாரணையொன்றினையடுத்து, பங்களாதேஷ் வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹமட், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உறுதிப்படுத்தப்பட்டது.

சர்வதேச கிரிக்கெட் சபையின் மேன்முறையீட்டு ஆணையாளர் மைக்கல் பெலொவ்வினால் தொலைதூர உரையாடல் மூலம் நடாத்தப்பட்ட விசாரணையானது சில மணித்தியாலங்கள் நீடித்திருந்தது. இதன்போது, தஸ்கின் சார்பாக பல சட்டச் சவால்கள் முன்வைக்கப்பட்டன. இவற்றினையும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பதில்களையும் கேட்ட பெலொவ், சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச தஸ்கின் மீது விதிக்கப்பட்ட இடைக்காலத்தடை செல்லுபடியாகும் எனத் தெரிவித்தார்.

எவ்வாறெனினும் தனது பந்துவீச்சுப் பாணியில் மாற்றத்தை ஏற்படுத்திய பின், எந்த நேரத்திலும் மீள் சோதனைக்கு தஸ்கின், சர்வதேச கிரிக்கெட் சபையிடம் விண்ணபிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .