2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நைஜீரிய கால்பந்தாட்ட அணிக்கு தடை விதிக்கும் தீர்மானம் ரத்து

Super User   / 2010 ஜூலை 05 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரிய கால்பந்தாட்ட அணிக்குத் தடைவிதிக்கும் தீர்மானத்தை அந்நாட்டு அரசாங்கம் வாபஸ் பெற்றுள்ளது.
தென்னாபிரிக்காவில் நடைபெறும் உலகக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் நைஜீரிய அணி படுதோல்வியைத் தழுவியதையடுத்து அவ்வணிக்கு 2 வருடகாலத் தடை விதிக்கப்போவதாக நைஜீரிய அரசாங்கம் கூறியது.
எனினும் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுவதற்கு சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம்  ஆட்சேபம் தெரிவித்ததுடன் இத்தீர்மானத்தை மாற்றாவிட்டால் சர்வதேச கால்பந்தாட்ட அரங்கிலிருந்து நைஜீரியா நீக்கப்படும் எனவும் எச்சரித்தது. இது தொடர்பாக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம்   விதித்த காலக்கெடு இன்று முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர், நைஜீரிய கால்பந்தாட்ட அணிக்கு தடைவிதிக்கும் தனது தீர்மானத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக நைஜீரிய அரசாங்கம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .