2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானை வென்றது இந்தியா

Editorial   / 2017 ஜூன் 05 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான, இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில், இந்திய அணி, அதிரடியாக வெற்றிபெற்றது.

பேர்மிங்காமில், நேற்று (04) இடம்பெற்ற இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட், இந்திய அணியைத் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் இனிங்ஸின் இடையே மழை குறுக்கிட்டிருந்தபோதும், றோகித் ஷர்மா, ஷீகர் தவானின் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்ற இந்திய அணி, இனிங்ஸின் மத்திய பகுதியில், விரைவாக ஓட்டங்களைப் பெறத் தடுமாறியது.

இந்நிலையில், அத்தருணத்தில் களம் புகுந்த யுவ்ராஜ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியதுடன், பின்னர், இனிங்ஸின் இறுதிப் பகுதியில், கோலியும் ஹார்டிக் பாண்டியாவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடியிருந்தனர். எவ்வாறெனினும், யுவ்ராஜ், கோலியினது பிடியெடுப்புகளை, பாகிஸ்தான் தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் இனிங்ஸ் 48 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், இந்திய அணி, 48 ஓவர்கள் முடிவில், மூன்று விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், றோகித் ஷர்மா 91 (119), விராத் கோலி ஆட்டமிழக்காமல் 81 (68), ஷீகர் தவான் 68 (65), யுவ்ராஜ் சிங் 53 (32), ஹார்டிக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 20 (06) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஷடாப் கான், ஹஸன் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பின்னர், பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடும்போதும் மழை குறுக்கிட்டமை காரணமாக, டக் வேர்த் லூயிஸ் முறைப்படி, 41 ஓவர்களில் 289 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட நிலையில், 33.4 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து, 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற பாகிஸ்தான், 124 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், அஸார் அலி 50 (65), மொஹமட் ஹபீஸ் 33 (43) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், உமேஷ் யாதவ் 3, இரவீந்திர ஜடேஜா, ஹார்டிக் பாண்டியா ஆகியோர் தலா 2, புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக, யுவ்ராஜ் சிங் தெரிவானார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .