2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரேஸில், இங்கிலாந்து, ஜப்பான் வென்றன

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சிநேகபூர்வ கால்பந்தாட்டப் போட்டிகளில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், பிரேஸில், இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட அணிகள் வென்றன.

பிரேஸில், 5-0 என்ற கோல் கணக்கில் எல் சல்வடோரை வென்றிருந்தது. பிரேஸில் சார்பாக றிஷல்ஸன் இரண்டு கோல்களையும் நெய்மர், பிலிப் கோச்சினியோ, மார்க்குய்ன்ஹாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

இங்கிலாந்து, 1-0 என்ற கோல் கணக்கில் சுவிற்ஸர்லாந்தை வென்றது. இங்கிலாந்து சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்க்கஸ் றஷ்போர்ட் பெற்றிருந்தார்.

ஜப்பான், 3-0 என்ற கோல் கணக்கில் கொஸ்டா றிக்காவை வென்றது. ஜப்பான் சார்பாக, ஷோ ஸஸகி, டகுமி மினமினோ, ஜுன்யா இடோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

கொலம்பியா, ஆர்ஜென்டீனா அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

போலந்து, அயர்லாந்துக் குடியரசு அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

லைபீரியா, 1-2 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவிடம் தோல்வியடைந்திருந்தது. குறித்த போட்டியில், 51 வயதான லைபீரியாவின் ஜனாதிபதி ஜோர்ஜ் வெயா விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.சி மிலனின் முன்னாள் முன்கள வீரரான ஜோர்ஜ் வெயாவின் 14ஆம் இலக்க சீருடைக்கு ஓய்வளிக்கும் முகமாகவே குறித்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .