2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘மலிங்க எப்போதும் சம்பியனே’

Editorial   / 2017 மே 22 , பி.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் 10ஆவது பருவகாலத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி, ஓர் ஓட்டத்தால் சம்பியனாகியுள்ளது. 

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை, குறைந்த ஓட்ட எண்ணிக்கையொன்றையே பெற்றுக் கொண்ட போதும், தமது அணியின் பந்துவீச்சாளர்களாலேயே, சம்பியனாகியிருந்தது. நான்கு ஓவர்கள் பந்துவீசிய லசித் மலிங்க, 21 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்ததோடு, முக்கியமான 18ஆவது ஓவரில், 7 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்திருந்தார்.  

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த மும்பை அணியின் வழிகாட்டுநரான சச்சின் டெண்டுல்கர், “போட்டியின் முதலாவது பாதி, சிறப்பாக அமையவில்லை. இடைவேளையின்போது நாம் ஒன்றுகூடினோம். மஹேல ஜெயவர்தன (மும்பை அணியின் பயிற்றுநர்) சிறந்த உரையொன்றை ஆற்றினார். எங்களால் முடியுமென்று நம்பினோம். அழுத்தத்துக்கு மத்தியில், களத்தடுப்புச் சிறப்பாக இருந்தது.

“ஒருதடவை சம்பியனென்றால், எப்போதும் சம்பியனென்று நம்புவன் நான். பல ஆண்டுகளாக, எமக்காக, லசித மலிங்க, சிறப்பாக விளையாடியுள்ளார். இறுதிப் போட்டியன்று, சிறப்பான எதையும் செய்வார் என நான் உறுதியாக நம்பினேன். அவர் சிறந்த பருவகாலத்தைக் கொண்டிருகாவிடினும், ஓர் ஓவரில் போட்டியை மாற்றக் கூடிய ஒரு நபர் அவர்” எனக் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X