2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முன்னிலையை நீடித்துக் கொண்டார் ஹமில்டன்

Shanmugan Murugavel   / 2016 ஓகஸ்ட் 01 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மன் கிரான்ட் பீறிக்ஸில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்ற மெசிடிஸ் அணியின் பிரித்தானியச் சாரதியான லூயிஸ் ஹமில்டன், தனது சக மெர்சிடிஸ் அணியின் ஜேர்மனியச் சாரதி நிக்கோ றொஸ்பேர்க்குக்கும் தனக்குமிடையிலான சம்பியன்ஷிப் புள்ளிகள் வித்தியாசத்தை 19 ஆக அதிகரித்துக் கொண்டார்.

பந்தயத்தை இரண்டாவது நிலையிலிருந்தே ஆரம்பித்த ஹமில்டன் தொடக்கத்திலேயே முதல் நிலையைப் பெற்றிருந்த நிலையில், மறுபக்கம், முதலாவது நிலையிலிருந்து ஆரம்பித்த றொஸ்பேர்க், கடினமான பந்தயத்தை எதிர்கொண்டு நான்காவது இடத்துக்கு பின்தங்கியிருந்தார். இது தவிர, ரெட் புல் அணியின் பெல்ஜியச் சாரதியான மக்ஸ் வெர்ஸ்ட்டப்பனை, பந்தயப் பாதையிலிருந்து வெளியே தள்ளியமைக்காக றொஸ்பேர்க்குக்கு ஐந்து செக்கன் தண்டமும் விதிக்கப்பட்டிருந்தது.

இப்பந்தயத்தில் இரண்டாமிடத்தை ரெட் புல் அணியின் அவுஸ்திரேலியச் சாரதியான டேனியல் றிக்கார்டோ பெற்றதோடு, மூன்றாமிடத்தையும் அதே ரெட் புல் அணியைச் சேர்ந்த வெர்ஸ்ட்டப்பன் பெற்றிருந்தார்.

ஐந்து போட்டிகளின் பின்னர், றொஸ்பேர்க்கிலிருந்து 43 புள்ளிகள் பின்தங்கியிருந்த ஹமில்டன், ஏழு போட்டிகளின் முடிவில், தற்போதிருக்கும் முன்னிலையைப் பெற்றுள்ளதோடு, இன்னும் ஆறு புள்ளிகள் முன்னிலையைப் பெற்றால், முழுமையாக வெற்றி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பந்தயத்தில் பெற்ற வெற்றியானது, ஹமில்டனின் தொடர்ச்சியான நான்காவது வெற்றியாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .