2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிப்பு

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்தியத் தீவுகள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 பேர் கொண்ட குழாமாகவே இக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், கடந்த வாரம் டினேஷ் ராம்டீன் டுவீட் செய்திருந்தது போன்று, முன்னாள் அணித்தலைவரும் விக்கெட்காப்பாளருமான அவர் இடம்பெற்றிருக்கவில்லை. இது தவிர, கடந்த டிசம்பரில், அவுஸ்திரேலியாவுக்கெதிராக டெஸ்ட் தொடரில் மோசமாகச் செயற்பட்டிருந்த அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் கேமர் ரோச்சும் இடம்பெறவில்லை, தவிர, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபைக்கு அறிவித்த ஜெரோம் டெய்லரும் குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.

ராம்டீனுக்கு பதிலாக ஷேன் டௌ ரிச், விக்கெட்காப்பாளராக குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, றொஸ்டன் சேஸ் எனும் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர், முதற்தடவையாக மேற்கிந்தியத் தீவுகள் குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, துடுப்பாட்ட வீரர் லியோன் ஜோன்ஸன் மீண்டும் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஷனோன் கப்ரியல் மட்டுமே வேகப்பந்துவீச்சாளராக குழாமில் இடம்பெற்றுள்ளதோடு, வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர்களாக கார்லோஸ் பிராத்வெயிட், அணித்தலைவர் ஜேஸன் ஹோல்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளதோடு, சுழற்பந்துவீச்சாளராக தேவேந்திர பிஷூ மட்டும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 21ஆம் திகதி அன்டிகுவாவில் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குழாமில் இடம்பெறாமை குறித்து எதிர்ப்பை வெளிப்படுத்திய ராம்டீனுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.  

குழாம்: ஜேஸன் ஹோல்டர், கிரேய்க் பிராத் வெயிட், தேவேந்திர பிஷூ, ஜெர்மைன் பிளக்வூட், கார்லோஸ் பிராத்வெயிட், டரன் பிராவோ, ராஜேந்திர சந்திரிகா, றொஸ்டன் சேஸ், ஷேன் டௌரிச், ஷனோன் கப்ரியல், லியோன் ஜோன்ஸன், மார்லன் சாமுவேல்ஸ்‌


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .