2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யுனிஸ் கானின் ஓய்வை விமர்சிக்கிறார் வக்கார்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 16 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவருமான யுனிஸ் கான், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதற்கு எடுத்த முடிவை, அவ்வணியின் பயிற்றுவிப்பாளர் வக்கார் யுனிஸ், விமர்சித்துள்ளார்.

சிறிது காலத்துக்குப் பின்னர் பாகிஸ்தானின் ஒருநாள் சர்வதேசப் போட்டிக் குழாமில் சேர்க்கப்பட்டிருந்த யுனிஸ் கான், தொடரின் முதலாவது போட்டியுடனேயே ஓய்வுபெற்றிருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள வக்கார் யுனிஸ், 'நடைமுறையின்படி, தொடர் முழுவதையும் அவர் விளையாடியிருக்க வேண்டும். ஆனால், அவ்விதத்தில் தான் அவர் சிந்திக்கிறார்" எனத் தெரிவித்தார்.

யுனிஸ் கான் விளையாடிய முறை குறித்துப் பெருமையடைவதாகத் தெரிவித்த வக்கார் யுனிஸ், அவர் தொடர்ந்தும் டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றவுள்ள நிலையில், 10,000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்வார் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற முறை, துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்த வக்கார் யுனிஸ், அந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டதாகவும், தங்களனைவரையும் அது அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும் தெரிவித்தார்.

ஏற்கெனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷஹாரியார் கானும், யுனிஸ் கானின் ஓய்வு குறித்தும் அந்த ஓய்வு எடுக்கப்பட்ட காலகட்டம் குறித்தும் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .