2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விம்பிள்டன் ஒற்றையர் காலிறுதிக்கு ரோஜர் பெடரர், வில்லியம்ஸ் சகோதரிகள் முன்னேற்றம்.

Super User   / 2010 ஜூன் 29 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர், வில்லியம்ஸ் சகோதரிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அவுஸ்ரேலியாவின் ஜுர்கன் மெல்ஸரை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 7-6 என்ற செட் கணக்கில் அவுஸ்ரேலியாவின் ஜர்மிலா குரோத்தையும், செரீனா வில்லியம்ஸ் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் மரிய ஷரபோவாவையும் தோற்கடித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .