2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரந்திவ்வுக்குத் தடை, ஊதியத்தில் 100% அபராதம்

Super User   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது வேண்டுமென்றே நோபோல் வீசியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை அணியின் பந்துவீச்சாளர் சுராஜ் ரந்திவ்வுக்கு அப்போட்டிக்கான ஊதியம் முழுவதையும் அபராதமாக செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு போட்டியில் விளையாடவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திலகரட்ண தில்ஷானுக்கு அவரின் போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய வீரர் வீரேந்தர் ஷேவாக் 99 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் நோபோல் ஒன்றை வீசியதன் மூலம் ஷேவாக் சதம் குவிப்பதை தடுத்தாக சுராஜ் ரந்திவ் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதேவேளை நோபோல் வீசுமாறு  ரந்திவ்வுக்கு திலகரட்ன தில்ஷான் ஆலோசனை வழங்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக இலங்கைக் கிரிக்கெட் சபை இந்திய அணியிடம் மன்னிப்புக் கோரியதுடன் இது குறித்து விசாரணையையும் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .