2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

125 ஆவது விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப் ஆரம்பம்

Super User   / 2011 ஜூன் 20 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகின் மிக முக்கிய டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின.

லண்டனின் விம்பிள்டன் நகரிலுள்ள அகில இங்கிலாந்து புற்றரை டென்னிஸ் கழக அரங்குகளில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. ஜூலை 3 ஆம் திகதி இப்போட்டிகள் முடிவடையும்.

1877 ஆம் ஆண்டு விம்பிள்டன் போட்டிகள் ஆரம்பமாகின. அப்போதிருந்து 1915-1918 மற்றும் 1940-1945 ஆண்டுகள் தவிர்ந்த ஏனைய ஒவ்வொரு வருடமும் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

அதாவது இம்முறை 125 ஆவது தடவையாக  விம்பிள்டன் போட்டிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதை முன்னிட்டு கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால  விம்பிள்டன் போட்டிகள் குறித்த விவரணப் படமொன்று விம்பிள்டன் அரங்கில் எதிர்வரும் திங்கட்கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது.

இம்முறை விம்பிள்டன் போட்டிகளில் ஆண், பெண் ஒற்றையர் பிரிவுகளில் சம்பியனாகுபவர்களுக்கு தலா 11 லட்சம் ஸ்ரேலிங் பவுண் பரிசு வழங்கப்படவுள்ளது. இரண்டாமிடம் பெறுவோருக்கு 550,000 ஸ்ரேலிங் பவுண்கள் வழங்கப்படும்.

ஆண், மற்றும் பெண் இரட்டையர் பிரிவுகளில் சம்பியனாகுபவர்களுக்கு  250,000 ஸ்ரேலிங் பவுண்களும் கலப்பு இரட்டையர் போட்டியில் சம்பியனாகுபவர்களுக்கு 92,000 ஸ்ரேலிங் பவுண்களும் பரிசாக வழங்கப்படவுள்ளன.

மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கான சக்கரக் கதிரை டென்னிஸ் போட்டிகளும் நடைபெறுகின்றன. இவற்றில் சம்பியனாகுபவர்களுக்கு 7000 ஸ்ரேலிங் பவுண் பரிசு வழங்கப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .